தமிழகத்தில் பல்வேறு அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அந்தந்த பகுதிகளில் உள்ள மாணவர்கள் அரசு பள்ளிகளில் பயின்று வரும் நிலையில் ஒரு சில பள்ளிகளில் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. இதனால் அந்த பள்ளிகள் மூடப்படும் சூழலுக்கு ஆளாகிறது. அந்த வகையில் தமிழகத்தில்40 பள்ளிகளஅடிப்படை வசதிகள் குறைவு உள்பட பல்வேறு காரணங்களால் மூடப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு, 22 தொடங்கப் பள்ளிகள், 18 உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.இதில் அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டத்தில் 6, நீலகிரி, தேனி மாவட்டங்களில் தலா 5 அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை பதிலளித்துள்ளது.