தமிழகத்தில் இரண்டு வருடங்களுக்குப் பின் இந்த வருடம் தான் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டு உள்ளது. மேலும் இரண்டு வருடங்களுக்கு பின் பொதுத் தேர்வு நடத்தப்பட்டதால் மாணவர்களும் பதட்ட நிலையில் தான் தேர்வு எழுத சென்றுள்ளனர். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாவதாக இருந்தது. அதன்பின் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரே நாளில் அதாவது ஜூன் 20ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து கடந்த ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்த கொரோனா காலகட்டத்திற்கு பின் அரசு பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருகின்றது. கடந்த கல்வி ஆண்டு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு அனைத்து சனிக்கிழமையும் வகுப்புகள் நடைபெற்றுள்ளதால் இந்த கல்வி ஆண்டு முழுக்க அனைத்து சனிக்கிழமை விடுமுறை என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து தனியார் கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடம் கல்வி கட்டணத்தை கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது எனவும் அதிகமான கல்வி கட்டணம் வாங்கும் கல்வி நிறுவனங்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் எவ்வளவு கட்டணம் வரைக்கும் வசூலிக்கலாம் என்பது குறித்தான அறிவிப்பையும் பள்ளிக்கல்வித்துறை அந்தந்த கல்வி நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளது.இந்த நிலையில் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவிற்கு தனியாக ஒரு அதிகாரியை நியமிக்க கோரி பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு இருக்கிறது. இதற்கிடையே கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்யும் குழுவிற்கு தனி அதிகாரியாக சென்னை மாவட்ட ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற ஐஏஎஸ் மனோகரன் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.