தமிழகத்தில் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜவஹர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.இந்த போட்டிகள் நவம்பர் 12ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் குருவனம் பாதிப்பு குறைந்தது அடுத்த 19 மாதங்களுக்கு பிறகு தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
அதனால் தற்போது இந்த போட்டிகள் அவரது மனநிலையை கொஞ்சம் மாற்றும் விதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை அடுத்து வருகின்ற நவம்பர் 12ஆம் தேதி இந்த போட்டி சிவகங்கை மாவட்டத்திற்கு மன்னர் மேல்நிலைப் பள்ளியிலும், ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சுவார்ட்ஸ் பள்ளியிலும் நடைபெற உள்ளது. பள்ளி மாணவர்கள் காலை 9 மணி அளவிலும், கல்லூரி மாணவர்கள் இரண்டு மணி அளவிலும் போட்டியில் பங்கேற்கலாம். போட்டியில் தேர்வு செய்யப்பட்டவர்கள் மட்டுமே மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் கலந்து கொள்ள முடியும்.
இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு 5 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசு 3,000 ரூபாய், மூன்றாம் பரிசு 2000 ரூபாய் வழங்கப்படும்.மேலும் பங்கேற்கும் மாணவர்களின் சிறந்த முறையில் திறமையை வெளிப்படுத்தும் மாணவர்கள் 2 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு 2 ஆயிரம் வழங்கப்படும். இந்த போட்டிகள் தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக நடத்தப்படுகிறது.