தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பது தொடர்பாக மாவட்டங்களில் நிலவும் சூழலுக்கு ஏற்ப அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் முடிவெடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கனமழை காரணமாக சென்னை மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து நேற்று பிற மாவட்டங்களிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.இதற்கு பதிலளிக்கும் விதமாக இந்த விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் முடிவெடுக்கலாம் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இன்றும் 7 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.