Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு…. அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

இந்தியா முழுவதும் வாழும் ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்காக டாக்டர் அம்பேத்கர் குரல் எழுப்பினார். அதுமட்டுமல்லாமல் ஒதுக்கப்பட்ட மக்களுக்காக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கினார். வருடந்தோறும் அம்பேத்கர் பிறந்த நாளை அரசு விமர்சையாக கொண்டாடி வருகிறது. மேலும் அனைத்து பள்ளிகளிலும் அம்பேத்கர் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர். இப்போது இந்தாண்டு அம்பேத்காருக்கு 131-வது பிறந்தநாள் கொண்டாட உள்ளதால் தமிழ் வளர்ச்சி துறை சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடைபெற இருக்கிறது.

அந்த வகையில் தேனி மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் எந்த தலைப்பில் பேச்சுப் போட்டி நடைபெறும் என்பதை ஏப்ரல் 19ஆம் தேதி தான் அறிவிக்கப்படும் என்றும் அதே நாளில் பேச்சுப் போட்டிக்கான முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரியபடுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பேச்சுப்போட்டி காலை 10 மணியிலிருந்து பிற்பகல் 2 மணிக்குள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பேச்சுப்போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் மாணவர்கள் அந்தந்த பள்ளி மற்றும் கல்லூரி முதல்வரிடம் அனுமதி கடிதம் பெற்று வரவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பின் போட்டியில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ.5000 பரிசு தொகையும், 2-ம் பரிசாக ரூ.3,000 தொகையும், 3-ம் பரிசாக ரூ.2,000 பரிசு தொகையும் மற்றும் சான்றிதழும் வழங்கப்படும். அத்துடன் அரசு பள்ளிகள் சார்பாக பங்கேற்கும் 2 மாணவர்களுக்கு சிறப்பு பரிசாக தலா இரண்டாயிரம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |