தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படுள்ளது. மேலும் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக அனைத்து மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதனால் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய மதிப்பெண் கணக்கீட்டு முறை மூலம் மதிப்பெண் கணக்கீடு செய்யபட்டது. ஆனால் இந்த ஆண்டு பொதுத்தேர்வு கட்டாயமான முறையில் நடத்தப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. தற்போது பள்ளிகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதால் தற்போது கொரோனா பரவல் குறைந்து உள்ளதால் பள்ளிகளில் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடத்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து வருகிற ஏப்ரல் 19ம் தேதி அன்று அம்பேத்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ள புத்தகத் திருவிழா அரங்கில் மாணவ, மாணவிகளுக்கு பேச்சு போட்டி நடைபெற இருக்கிறது.
இப்போட்டியானது பள்ளி மாணவர்களுக்கு முற்பகல் 9.30 மணியளவிலும், கல்லூரி மாணவர்களுக்கு பிற்பகல் 1.30 மணியளவிலும் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.5,000, இரண்டாம் பரிசாக ரூ.3,000, மூன்றாம் பரிசாக ரூ.2,000 வழங்கப்பட இருக்கிறது. இதில் கலந்து கொள்ள நினைக்கும் பள்ளி மாணவர்கள் வட்டாரக் கல்வி அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும். அத்துடன் இப்போட்டியில் கலந்து கொள்ள நினைக்கும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் தாங்கள் பயிலும் கல்லூரிகளில் முதல்வரிடம் விண்ணப்பிக்க வேண்டும் என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பி. மதுசூதன் ரெட்டி கூறியுள்ளார்.