தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறப்பது பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. தற்போது தரவுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு முடிய இன்னும் 3 நாட்கள் உள்ள, முதல்வர் பழனிசாமி நாளை அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார்.
இந்நிலையில் தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளை ஜனவரி மாதம் திறக்கலாமா? என்பது பற்றி இதில் முடிவு செய்யப்பட உள்ளது. இந்த வருடம் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளை தற்போது திறக்க வாய்ப்பில்லை என்றும், பொங்கலுக்கு பிறகு திறக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மருத்துவ கல்லூரிகள் டிசம்பரில் திறக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.