Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் சிகிச்சை மையங்களாக மாற்றம்… சுகாதாரத்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை படிப்படியாக தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தமிழகத்தில் அமலில் உள்ளது. ஆனால் தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர்.

அதன்படி ஒரு நாளைக்கு கொரோனா பாதிப்பு இரண்டாயிரத்தை கடந்துள்ளது. அதன் காரணமாக தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தபடுமா என்ற மக்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. இந்நிலையில் ஏற்கனவே தளர்வுகள் உடன்அமல் படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு வெளியிட்ட கொரோனா தடுப்பு வழி முறைகளை தொடர்ந்து பின்பற்றி அறிவுறுத்தியுள்ளது. கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது.

கொரோனா பாதிப்பைப் பொறுத்து மாவட்ட அளவில், நகர அளவில் மற்றும் வார அளவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். மேலும் மத கூட்டம், உள்ளரங்க நிகழ்வுகள் மற்றும் அரசியல் கூட்டங்களால் கொரோனா பரவி வருகிறது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்க வருபவர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் பொதுத் தேர்வு மையங்கள், வாக்கு பதிவு மையங்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்கள் தவிர்த்து பிற பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் கொரோனா சிகிச்சை மையங்கள் ஆக மாற்றப்பட்டு வருகிறது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு கொரோணா தடுப்பு ஊசி செலுத்துவதற்கு மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |