நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான மாநிலங்களில் அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்த கல்வியாண்டு ஆன்லைன் மூலமாகவே நடத்தப்படுமா அல்லது பள்ளிகள் திறக்கப் படுமா என்று மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் கேள்வி எழுந்துள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால், பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை எப்போது திறக்கலாம் என்பது குறித்து அனைத்து துறை உயரதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் என்ற ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து முதல் கட்டமாக 9 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஆகஸ்ட் முதல் பள்ளிகளை திறக்கலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்படும் உள்ளது. இதையடுத்து பள்ளி சிறப்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.