Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடல்? – அரசு சொன்ன பதில்!!

மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் கொரோனா பரவும் மையங்களாக மாறவில்லை என்று தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.

கொரோனா தாக்கம் குறைந்து வந்ததை தொடர்ந்து, தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9, 10, 11, 12ம் வகுப்பு மற்றும் அனைத்து வகையான கல்லூரிகளும் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.. இதற்கிடையே பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சில பள்ளி, கல்லூரிகளில் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகின்றது.. இதனால் மாணவர்களின் பெற்றோர்கள் மத்தியில் பெரும் பயம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து தமிழகத்தில் தொடர்ந்து பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு தொற்று ஏற்படுவதால் அவற்றை மூட அரசுக்கு மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து அரசு, மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் கொரோனா பரவும் மையங்களாக மாறவில்லை. தேவைப்பட்டால் ஓரிரு நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனால் பள்ளி கல்லூரிகளை முழுவதுமாக மூட வாய்ப்பில்லை என கூறியுள்ளது.

 

Categories

Tech |