Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி குழந்தைகளுக்கு தடுப்பூசி…. முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை….!!!!

தமிழகத்தில் பல்வேறு துறை அதிகாரிகளுடன் முதல்வர் முக ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்துகிறார். தமிழகத்தில் உச்சத்திலிருந்த கொரோனா தொற்று பாதிப்பு தமிழக அரசின் தீவிர நடவடிக்கையால் கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்துள்ள நிலையில் தடுப்பூசி முகாம்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. வாரம்தோறும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது.

எனவே நவம்பர் 1ஆம் தேதி அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட இருக்கிறது. அதற்கான முன்னேற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் ஊரடங்கு கட்டுப்பாடுகள் பற்றி இன்று ஆலோசனை மேற்கொள்கின்றார். விஜயதசமியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை அன்று கோயில்களை திறக்கலாமா என்பது பற்றியும் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த இருக்கிறார்.

விழாக் காலத்தில் கோவில்களை திறந்தால் மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கும். ஆனால் இதில் மக்கள் பெருமளவில் கூடிய கொரோனா தொற்று பரவ காரணமாக அமைந்து விடக்கூடாது என்றும் தமிழக அரசு சிந்திப்பதாக கூறுகிறார்கள். மேலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் இந்த மாத இறுதி வரை அமலில் இருக்கும். அடுத்த கட்ட ஊரடங்கு பற்றியும், கோவில்கள் திறப்பு பற்றியும் முக்கிய முடிவுகள் இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட உள்ளது.

இதையடுத்து குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் எவ்வாறு அந்த பணியை செய்யலாம் என்பது பற்றியும் ஆலோசனை நடைபெற இருக்கிறது. நம்பர் 1 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட இருப்பதால் பள்ளிகள் மூலமாக குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றியும் விவாதிக்கலாம் என்று அதில் கூறப்படுகிறது.

Categories

Tech |