தமிழகத்தில் பள்ளி படிப்பை முடித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய பயிற்சி அளிக்கும் திட்டத்தில் பயன்பெற தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக அரசு பள்ளி மாணவர்கள் 2000 பேருக்கு எச் சி எல் நிறுவனம் வேலை வாய்ப்பு வழங்க உள்ளது. அதற்காக இலவச பயிற்சியும் அந்த நிறுவனம் வழங்குகிறது. மென்பொருள் வடிவமைப்பு,வடிவமைப்பு பொறியியல் மற்றும் தரவு பணிகள் உள்ளிட்ட hcl நிறுவனத்தின் பல பணி வாய்ப்புகளை பெறலாம்.
பயிற்சியின் ஏழாவது மாதம் முதல் மாதம் தோறும் பத்தாயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.அதே சமயம் பணியில் சேர்ந்தவுடன் தொடக்கநிலை ஊதியமாக வருடத்திற்கு 1.70 லட்சம் முதல் 2.20 லட்சம் வரை பணிநிலைக்கு ஏற்ப பெற முடியும் . இது குறித்த கூடுதல் தகவலை பெறுவதற்கு சென்னை – 8807940948, மதுரை- 9788156509, திருநெல்வேலி- 9894152160, திருச்சி – 9444151303, கோவை, ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய மூன்று மாவட்டங்களை சேர்ந்தவர்கள் 8903245731, 9865535909 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.