Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில்” பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு…. சிறப்பு பரிசுகள்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், முத்தமிழ் அறிஞர் கலைஞர் போன்ற தேசத் தலைவர்களின் பிறந்த நாளன்று மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாள் கொண்டாடப்பட இருக்கிறது. இதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இருக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டிகள் நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்0போட்டி நடைபெற இருக்கிறது. இப்போட்டியில் வெற்றி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு முதல் பரிசாக 5,000 ரூபாயும், இரண்டாம் பரிசாக 3,000 ரூபாயும், நான்காம் பரிசாக 2,000 ரூபாயும் வழங்கப்படுகிறது. இதனையடுத்து பள்ளி மாணவர்களுக்கு  2,000 ரூபாய் பரிசு வழங்கப்படும். இப்போட்டி பள்ளி மாணவர்களுக்கு காலை 10 மணிக்கும், கல்லூரி மாணவர்களுக்கு மதியம் 2 மணிக்கு தொடங்கப்படும். இந்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் டாக்டர் எஸ்.வினித் அறிவித்துள்ளார்.

Categories

Tech |