Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி மாணவர்கள்…. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்…. ஷாக் நியூஸ்….!!!!

தமிழகத்தில் கொரோனா 3-வது அலையின் தாக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்திருந்தது. குறிப்பாக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மீண்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்து இருப்பதை தொடர்ந்து 1 -12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 1ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகளை திறக்க அரசு அனுமதி அளித்தது. அந்த வகையில் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி நேரடி வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.

தற்போது வழக்கம்போல் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சியான தகவல் கிடைத்துள்ளது. அதாவது 30% மாணவர்கள் தொடர் விடுமுறையில் உள்ளதாக மாவட்ட அளவில் தொகுக்கப்பட்ட மாணவர்கள் பட்டியலின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் 12 மாணவர்கள் அதிகம் விடுப்பு எடுத்துள்ளது தெரியவந்துள்ளது. கொரோனா பரவல் மற்றும் ஒமைக்ரான் வைரஸ் காரணமாக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.

இத்தகவலை அறிந்த பள்ளிக்கல்வித்துறை மிகவும் அதிர்ச்சியடைந்தது. இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது, தற்போது கொரோனா பரவல் தாக்கம் குறைந்துள்ளது. அதுமட்டுமின்றி 10 மற்றும் 12 மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடைபெற இருக்கிறது. இதனால் பெற்றோர்கள் தயக்கம் காட்டாமல் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். மேலும் பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் முகக்கவசம் அணிதல் மற்றும் தனிநபர் இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

Categories

Tech |