பள்ளி மாணவர்களுக்கு ஏற்படும் விபத்தை தவிர்க்கும் வகையில் பள்ளிக் கல்வித் துறை முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது கொரோனா மூன்றாம் அலையின் தாக்கம் குறைந்து வருகிறது. இதனைத்தொடர்ந்து அரசு பல்வேறு தளர்வுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து தற்போது அநேக இடங்களில் பள்ளி மாணவர்களுக்கு விபத்துகள் ஏற்படுகிறது.
இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. மேலும் இதுபற்றி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருக்கிறார்.
அதில் கூறியிருப்பதாவது, “தற்போது பல இடங்களில் மாணவர்கள் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டி வருகிறார்கள். இதனால் ஏராளமான விபத்துகள் நடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதனால் இதனை தவிர்க்கும் வகையில் இனிவரும் நாட்களில் பள்ளிகளுக்கு மாணவர்கள் இருசக்கர வாகனங்களில் பயணிக்க கூடாது என கூறப்பட்டுள்ளது.