தமிழகத்தில் ஏப்ரல் 16ஆம் தேதி சனிக்கிழமை அன்று பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை குறையத்தொடங்கியதன் காரணமாக அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அளித்தது. இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதி முதல் 1 – 12 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் வழக்கம் போல நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. கடந்த மாதம் பொதுத் தேர்வுக்கான கால அட்டவணை பாடவாரியாக வெளியாகியுள்ளது.
அதில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 25ஆம் தேதி தொடங்கி மே 2ஆம் தேதி முதல் செய்முறை தேர்வு நடைபெறும் என்றும் அதனை தொடர்ந்து மே 5ம் தேதி முதல் பொதுத்தேர்வும் தொடங்க இருக்கிறது.இந்த நேரத்தில் பள்ளிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு 15ம் தேதி புனித வெள்ளி ஆகிய இரண்டு நாட்களும் பள்ளிகளுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இடையில் சனிக்கிழமை வேலை நாளாகவும், பிறகு மறுநாள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாகும்.
இந்த நிலையில் இடையில் உள்ள சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது வந்தது. 16 ஆம் தேதி சனிக்கிழமையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து ஏப்ரல் 14 முதல் 17 வரை பள்ளிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை வரவுள்ளது. அதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.