Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் அத்துமீறல்…. உயர்நீதிமன்றம் வேதனை….அதிர்ச்சி சம்பவம்….!!!!

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 15 வயது சிறுவனை காதலித்தது குறித்து தாய் திட்டியதால், அவருடன் சண்டையிட்ட 17 வயது சிறுமி, உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் உறவினர் வீட்டில் சிறுமியிடம் உறவு வைத்துக் கொண்டால், திருமணத்துக்கு சம்மதிப்பார்கள் என ஆசை வார்த்தைகளை கூறியுள்ளனர். இதனால் சிறுவனுடன் உடலுறவு கொண்டதால் சிறுமி கருவுற்றுள்ளார்.

இதையடுத்து இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுமியும், அவரது தாயும் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் அந்த வழக்கில் திருவள்ளூர் சிறார் நீதி குழுமத்தில், சிறுவனின் ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் 3ஆண்டுகள் தண்டனை விதித்து, மேலும் செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கும்படி 2021ஆம் ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து சிறுவனின் சார்பில் அவரது தாய் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இதையடுத்து இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சிறுமி சம்பவம் நடந்த போது மைனர் என்பது சிறார் நீதி குழுமத்தில் நிரூபிக்கப்படவில்லை. எனவே  சிறார் நீதி சட்டப்படி உரிய காலக்கெடுவில் முறையாக விசாரிக்காமல், சிறுவனின் வாக்குமூலத்தின் அடிப்படையில் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இதனால் சிறார் நீதி குழுமத்தின் தீர்ப்பை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.

இதனை  தொடர்ந்து இந்நிகழ்வுகளை தொடர்ந்து குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் காவல் துறையினருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்திய டிஜிபி சைலேந்திர பாபுவின் பதிவு ஆறுதலளிக்கும் வகையில் உள்ளதாக நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.  மேலும் பள்ளிக்கல்வித் துறை மற்றும் சமூக நலத் துறையும் இணைந்து இதுபோன்ற நிகழ்வுகளை மீண்டும் நடைபெறாத முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அறுவுறுத்தியுள்ளார்.

Categories

Tech |