Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு விழா…. மனம் உருகி பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்….!!!!!!!!!

தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவியின் இறப்பு இன்னும் மக்கள் மனதில் வருத்தத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. மாணவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது என கூறி வந்த பெற்றோர்கள், பிரேத பரிசோதனையில் தங்கள் தரப்பு மருத்துவரை அனுமதிக்க கோரிய வழக்கை தான் நியாயம் கிடைக்க வில்லை என எழுதி உள்ளார்கள். இந்த வழக்கு முடிந்து விட்டது. இது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என போடுவது சரியாக இருக்காது. இந்த சூழலில் இன்று தமிழக முதல்வர் தலைமையில் பள்ளி மாணவர்களின் உடல்நலம், மனநலம் சார்ந்த விழிப்புணர்வு விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் இந்த விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ், அமைச்சர்கள் மா. சுப்ரமணியன், சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, பள்ளி கல்வித்துறை செயலாளர் காஜல் உஷா, பள்ளி கல்வித்துறை ஆணையர் போன்ற கலந்து கொண்டுள்ளனர்.

இந்த விழாவில் பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறும்போது, மாணவியின் மரணம் காரணமாக இறுக்கமான மனநிலையில் தான் இருக்கிறேன் என வருத்தத்துடன் பேசி உள்ளார். மேலும் கொரோனா காலத்திற்குப் பின் மாணவர்கள் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வருகின்றனர். மாணவர்களின் கல்விக்காக பல முயற்சிகளை அரசு மேற்கொண்டுள்ளது. ஆனால் மனநிலையை சரி செய்வது என்பது மருத்துவர்கள் வழங்கும் விழிப்புணர்வுகளில் தான் உள்ளது. பள்ளி மாணவியின் இறப்பு காரணமாக இறுக்கமான மனநிலையில் தான் இருந்து வருகிறேன் என வருத்தமாக பேசி உள்ளார். மாணவர்களின் மதிப்பெண் அவர்களின் வாழ்க்கையை நிர்ணயிக்காது. ஒரு குழந்தையின் இறப்பால் 3000 குழந்தைகள் படிப்பு போய்விடுகிறது. அதைப் பற்றி தான் நான் நினைக்க வேண்டும் என வருத்தப்பட்டு பேசியுள்ளார்.

Categories

Tech |