Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் மாணவர்களின் நலனை கருதி பல மாவட்டங்களிலும் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழகத்தில் மாணவர்களின் நலனை கருதி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

ஜேஇஇ உள்ளிட்ட அனைத்து போட்டி தேர்வுகளுக்கும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.மழைக்காலத்தில் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. ஒழுகும் பள்ளி கட்டிடங்கள், ஊறிப்போன சுற்று சுவர்கள் மற்றும் மின் இணைப்பு உள்ளிட்ட அனைத்தையும் தொடர்ந்து கண்காணிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தொடர் மழை காரணமாக விடுமுறை அளிக்கும் நாட்களை ஈடு செய்ய சனிக்கிழமைகளில் இனி பள்ளிகள் இயங்கும் என அமைச்சர் தெரிவித்துள்ள நிலையில் இந்த செய்தி மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |