Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு…. பாடத்திட்டங்கள் மாற்றம்?…. அமைச்சர் முக்கிய தகவல்……!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. கொரோனா தொற்று குறைந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மாணவர்களுக்கு அனைத்து பாடங்களையும் நடத்த முடியாத சூழ்நிலை நிலவுவதால் 50% பாடத்திட்டங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சென்னையில் காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் வைத்து தேசிய மரபுசார் விதை திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி கலந்து கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளி மாணவர்களின் பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்படும். பாடத்திட்டத்தில் இயற்கை விவசாய பற்றி தனி பாடமாக சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

அதன் பிறகு அரசு 14 மாவட்டங்களில் 20 ஏக்கர் பரப்பளவில் பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டு இயற்கை விவசாயம் பற்றி விழிப்புணர்வை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்நிகழ்ச்சியில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், நெல் ஜெயராமன் மற்றும் பாண்டிச்சேரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உருவப் படங்களுக்கும் மரியாதை செலுத்தப்பட்டது.அது மட்டுமில்லாமல் இயற்கை விவசாய உற்பத்திப் பொரு ட்களை கொண்டு கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் இயற்கை ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Categories

Tech |