Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு சர்ப்ரைஸ்…. பள்ளிக்கல்வித்துறை போட்ட சூப்பர் திட்டம்….!!!

தமிழகத்தில் 9 -12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் 1-8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நவம்பர் 1-ஆம் தேதி பள்ளிகள் தொடங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் அவற்றிற்கான பணிகளும் முழு வீச்சில்  நடந்து கொண்டிருக்கிறது. 18 மாதங்களாக வீட்டிலேயே இருந்து விட்டு மாணவர்கள் தற்போது பள்ளிக்குச் செல்லும்போது அவர்கள் சோர்வடையாத வண்ணம் திட்டமிடப்பட்டுள்ளது. தொடக்கக் கல்வி இயக்குனரகத்தில் இருந்து அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு இதுபற்றி விரிவான சுற்றறிக்கை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் நீண்ட நாட்களுக்குப் பின் பள்ளிக்குச் செல்வதால் அவர்களை உளவியல் ரீதியாக தயார் படுத்தவும் எழுத்து, கதை கூறுதல், ஓவியம் வரைதல், ஆகியவற்றை ஊக்குவிக்கவும் வேண்டும். மாவட்ட அலுவலர்கள் பள்ளிகள் திறப்பதற்கு தயார் நிலையில் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து அடுத்த வாரத்திற்குள் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மாணவர்களுக்கு 15 நாட்களுக்கு ஆடல், பாடல், மற்றும் விளையாட்டு போன்று  ஊக்கம் அளித்து அதன் பின்னர் கல்வியை கற்பிக்க உள்ளோம். என்று கூறியுள்ளனர். இதையடுத்து பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் பெற்றோர்களின் சம்மதத்துடன் வருமாறு ஒரு கடிதம் எழுதி அதில் பெற்றோர்,பாதுகாவலர், கையொப்பம் பெற்று வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |