Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு…. மீண்டும் சுழற்சி முறையில் வகுப்பு?…. வெளியான முக்கிய தகவல்….!!!!

நேற்று முதல் தமிழகத்தில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மீண்டும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா தொற்று தமிழகத்தில் இன்னும் முழுமையாக குறையவில்லை. எனவே 15 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் தடுப்பூசிகளை செலுத்தி கொண்டால் மட்டுமே பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் பள்ளி வகுப்பறைகளில் மாணவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் போதிய இடவசதி இல்லாத பள்ளிகளில் மீண்டும் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்துவது குறித்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில் மாணவர்கள் கட்டாயம் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். எனவே மூன்று நாட்கள் கழித்து இடவசதி இல்லாத பள்ளிகளில் தேவைப்பட்டால் மீண்டும் வகுப்புகளை சுழற்சி முறையில் நடத்திக் கொள்ளலாம்.

அதேபோல் மாணவர்கள் நோய் கட்டுப்பாடு பகுதியில் இருந்து பள்ளிக்கு வர வேண்டாம். அடுத்த இரண்டு வாரம் முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டும். தமிழகத்தில் மொத்தம் 33.46 லட்சம் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை 77 சதவீதம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |