பழனி சின்ன காந்திபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் பள்ளி மூடப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளிகள் திறப்பது பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதற்கு 90% பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்த நிலையில் ஜனவரி 19ஆம் தேதி 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. தற்போது அரசு பள்ளிகளில் 92 சதவீத மாணவர்கள் வருகை புரிந்துள்ளதால் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் பழனி சின்ன காந்திபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அதனால் அந்தப் பள்ளியில் பிற ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகின்றது. மேலும் அந்த பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டது. ஏற்கனவே சேலம் அருகே பள்ளி மாணவி கொரோனா உறுதியான நிலையில் தற்போது பழனியில் ஆசிரியருக்கும் கொரொனா கண்டறியப்பட்டுள்ளது. இது சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.