தமிழகத்தில் வியாபார மந்தம் காரணமாக பழங்களின் விலை சரிவை சந்தித்துள்ளது. வழக்கமாக ஆடி மாதத்தில் காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை உயர்ந்து காணப்படும். ஆனால் நடப்பு ஆண்டில் பழங்கள் விற்காமல் தேங்கியுள்ளது. தமிழகத்தில் ஒரு சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் பழங்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது.
அதன்படி கிலோவுக்கு இருபது ரூபாய் முதல் 30 ரூபாய் வரை பழங்களின் விலை குறைந்துள்ளது. கிலோவாரியாக ஆப்பிள் 190 ரூபாய், மாதுளை 180 ரூபாய், சாத்துக்குடி 50 ரூபாய், ஆரஞ்சு 120 ரூபாய், திராட்சை 100 ரூபாய், கொய்யா 40 ரூபாய், சப்போட்டா 40 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.