தமிழகத்தில் திமுக அரசு தேர்தல் பிரச்சாரத்தின் போது அளித்த பல்வேறு வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. அதன்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை எப்போது நிறைவேற்றப்படும் என்று அரசு ஊழியர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பள்ளிக்கல்வித் துறைச் செயலாளர் காகர்லா உஷாவை நேரில் சந்தித்து கொடுத்தனர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய கொண்டு வரவேண்டும் என்றும் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்றதால் வேறு பள்ளிகளுக்கு மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களை திரும்ப பழைய பள்ளிகளில் பணியமர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற பள்ளி கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்து வருகிறோம். அதற்கான மனுவை பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் உஷாவிடம் கொடுத்துள்ளோம் என்று தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் செயலாளர் தாஸ் கூறியுள்ளார்.