தமிழ்க்தில் அரசு ஊழியர்களுக்கு திமுக அரசு அளித்த வாக்குறுதியின்படி ஜனவரி மாதம் அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் உடைய சம்பளம் உயர்ந்துள்ளது. இதனால் ஏராளமான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வு பெறும் பயன் பெற்று வருகின்றனர். இதனை அடுத்து உறுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்கான பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.
அதனைத் தொடர்ந்து அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பாக பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த மே-26 போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூன் 16-ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை விவாதம் போது பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது முதல்வர் எடுக்கும் முடிவுக்கு பிறகு தான் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதியமைச்சர் தெரிவித்தார். இதனால் பழைய ஓய்வூதிய திட்டத்தைப் பொறுத்தவரை முதலமைச்சர் எடுக்கும் முடிவே இறுதி முடிவு என்று தெரிகிறது. எனவே முதல்வர் தற்போது எடுக்கும் முடிவு என்ன என்பது குறித்து அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.