தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் நடப்பு ஆண்டிற்கான முதல் பருவ தேர்வு நவம்பர் 25ஆம் தேதி முதல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் 55 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் சுமார் மூன்று லட்சம் மாணவர்கள் பயின்று வருகிறார்கள்.இவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் இரண்டு பருவ தேர்வுகள் நடத்தப்படும் நிலையில் நடப்பு ஆண்டிற்கான முதல் பருவ தேர்வு நவம்பர் மாதம் 25ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 17ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
தேர்வுகள் முடிந்தவுடன் மாணவர்களுக்கு டிசம்பர் 18 முதல் ஜனவரி 1 வரை விடுமுறை அளிக்கப்பட்டு கல்லூரிகள் மீண்டும் ஜனவரி இரண்டாம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேர்வு கூட அனுமதிச்சீட்டை தேர்வர்கள் இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.