தமிழகத்தில் பால் விலை உயர வாய்ப்பு இல்லை என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்து இருக்கிறார். கடந்த அதிமுக ஆட்சியில் பால் விலை ரூபாய் 6 உயர்த்தினர். இதையடுத்து திமுக ஆட்சியில் ரூபாய் 3 குறைக்கப்பட்டுள்ளது. பால் விலையால் தமிழ்நாடு அரசுக்கு ரூபாய் 220 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பால் விலை உயர்வு காலத்தின் கட்டாயம் என அமைச்சர் நேரு தெரிவித்திருந்த கருத்து சர்ச்சையானது. அதனை தொடர்ந்து நாசர் இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.