தமிழகத்தில் கடந்த 3 வருடங்களாக நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் நடைபெறாமல் இருந்தது. தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் மற்றும் கடம்பூர் பேரூராட்சி தவிர அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வருகின்ற 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வாக்குப்பதிவு தொடங்கும் 48 மணி நேரத்திற்கு முன்பாக தேர்தல் பிரச்சாரத்தை நிறுத்த வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. அதன்படி பிப்ரவரி 17-ஆம் தேதி அன்று மாலை 6 மணிக்கு மேல் பிரச்சாரக் கூட்டங்கள், ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.