தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. எனவே தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு நடைபெற உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது தேர்தலுக்கு முந்தைய நாள் ( பிப்.18 ) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏனென்றால் இந்த முறை அதிக அளவில் வாக்குச்சாவடிகள் பள்ளிகளில் அமைக்கப்பட்டிருப்பதால் வாக்குச்சாவடிகள் அனைத்தும் தேர்தலுக்கு முந்தைய நாள் காவல் துறையினரின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும். எனவே தேர்தலுக்கு முந்தைய நாள் ( பிப்.18 ) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இன்னும் ஓரிரு நாட்களில் இதுகுறித்த அறிவிப்பானது வெளியாகலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.