தமிழகத்தில் உள்ள 138 நகராட்சிகள், 21 மாநகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு வருகின்ற 19-ஆம் தேதி அன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் நாளன்று ( பிப்ரவரி 19 ) தமிழக அரசு பொது விடுமுறையை அறிவித்துள்ளது. மேலும் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலில் உள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி செயல்பட்டதால் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் தேர்தல் விதிமுறைகளை கடைபிடிக்காத அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் தமிழக அரசு, இந்த பகுதிக்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பிப்ரவரி 19-ஆம் தேதி அன்று அறிவிக்கப்பட்ட பொது விடுமுறையும் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் அப்பகுதியில் உள்ள மக்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.
அதேபோல் கடம்பூர் பேரூராட்சியில் வருகிற 22-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அதிமுக வேட்பாளர் ஒருவர் திடீரென தற்கொலை செய்து கொண்டதால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்திலும் தற்போது தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.