Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பிப்.20 தனியார் பள்ளி ஆசிரியர்களே!…. மிஸ் பண்ணிடாதீங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. இதனால் தனியார் பள்ளிகளில் சில ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தனர். தற்போது தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்பில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் தற்போதைய ஆசிரியர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நாளை ( பிப்.20 ) மதுரையில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

ஆசிரியர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் இடம் :-

வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

விண்ணப்பதாரரின் கல்வித்தகுதி :-

முதுகலை அல்லது இளங்கலை படித்த மாணவர்கள், B.Ed, M.Ed, M.phil படித்து முடித்த மாணவர்கள் பங்கேற்கலாம் கல்வியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை :-

நேர்முகத் தேர்வு – நேர்முக தேர்வுக்கு வருபவர்கள் உண்மை சான்றிதழ் அல்லது நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-1 கொண்டு வரவும். மேலும் ஏதாவது ஒரு டாபிக் நீங்களே தேர்வு செய்து படித்து வரவும். DEMO CLASS எடுக்க தயாராக வரவும் என்று வேலைவாய்ப்புக்கான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு – ஆன்லைன் மூலம் பதிவு செய்தவர்கள் மட்டுமே இந்த வேலைவாய்ப்பு முகாமிற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

* மேலும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க www.tnschoolteachers.com என்ற இணையதளத்தில் FOR TEACHERS – SIGNUP – CLICK செய்து பதிவு செய்ய வேண்டும்.

* அதனைத் தொடர்ந்து மீண்டும் TEACHERS LOGIN-ஐ கிளிக் செய்து உங்களுடைய மொபைல் எண் மற்றும் நீங்கள் கொடுத்த பாஸ்வேர்டு உள்ளிட்டவற்றை கொண்டு LOGIN செய்ய வேண்டும்.

* இதையடுத்து FILL YOUR COMPLETE DETAILS என்ற MENU-ஐ கிளிக் செய்து உங்களுடைய விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். www.tnschoolteachers.com என்ற இணையத்தளத்தில் பதிவு செய்துவிட்டு நாளை ( 20.02.2022 – ஞாயிறு ) நேர்முக தேர்வுக்கு நேரில் வரவும். அதேபோல் தவறான தகவல்களை பதிவு செய்பவர்களுடைய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |