Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பிரீ பையர் விளையாட்டுக்கு வரும் தடை…. இளம் தலைமுறைக்கு நீதிபதிகள் கூறிய சில அட்வைஸ்….!!!

நாகர்கோவிலை சேர்ந்த ஐரின் அமுதா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், எனது மகள் இதழ் வில்சன் கல்லூரி முதலாமாண்டு பயின்று வருகிறார். கடந்த 6 ஆம் தேதி முதல் எனது மகளை காணவில்லை. இது குறித்து விசாரித்த போது எனது மகள் அவரது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து ப்ரீபையர் விளையாடுவதாகவும், அதில் ஏற்பட்ட பழக்கமாக கன்னியாகுமரியை சேர்ந்த ஜாப்ரின் என்பவருடன் சென்றிருக்கலாம் என்று தெரிவித்தனர். வளரிளம் பருவத்தில் உள்ள எனது மகளை ஆசை வார்த்தை கூறி ஜாப்ரின் மற்றும் அவரது நண்பர்கள் கடத்திருக்கலாம் என சந்தேகம் உள்ளது. இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்த நிலையில் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. எனவே எனது மகளை மீட்டு ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் நிஷாபானு மற்றும் ஆனந்த வெங்கடேஷ் அமரும் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கொரோனா ஊரடங்கு கால கட்டம் என்பது இளைய தலைமுறைக்கு சோதனை காலகட்டமாகவே அமைந்தது. ஆன்லைன் வகுப்பு நடைபெற்ற போது இளைய தலைமுறைகள் பலர் மொபைல் மோகத்தில் ஆன்லைன் விளையாட்டில் மூழ்கியுள்ளனர். இளம் பருவத்தினர் ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கி தனி உலகத்தின் வாழ்ந்து வருகின்றனர். நிஜ வாழ்க்கை ஏற்க மறுக்கின்றனர். அதனைத் தொடர்ந்து தற்போது உள்ள தொழில்நுட்ப வளர்ச்சியில் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்தாலும் மீண்டும் வெவ்வேறு பெயர்களில் இணையத்தில் அந்த விளையாட்டு வந்து கொண்டே தான் இருக்கிறது. இதனை முழுவதுமாக தடை செய்வது என்பது இயலாத காரியமாகவே உள்ளது.

தற்போது உள்ள சூழ்நிலையில் பெற்றோர்கள் குழந்தைகள் அனைவரும் மொபைலில் மூழ்கி ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதே இல்லை. பிரீ பையர் விளையாட்டு ரத்தம் தெரிப்பது போல் உள்ள காட்சிகள் குழந்தைகளிடம் வன்முறை தூண்டு விதமாக அமைந்துள்ளது. தற்பொழுது உள்ள தொழில்நுட்ப வளர்ச்சியில் அவர்களே அவர்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இந்த வழக்கில் காணாமல் போன பெண் பெற்றோரிடம் செல்ல விரும்புவதாக தெரிவித்துள்ளதால், பெற்றோர்கள் தனது மகளை அழைத்துச் செல்லலாம். பெண்ணே அழைத்துச் சென்றதாக கூறப்படும் வாலிபர் மீண்டும் பெண்ணிற்கு எந்தவிதமான இடையூறு செய்யக்கூடாது. அவ்வாறு செய்தால் காவல்துறையை கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தனர்.

Categories

Tech |