Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பிளஸ் 2 துணை தேர்வு மதிப்பெண் பட்டியல்….. இன்று (ஆகஸ்ட் 22) மதியம் 2 மணிக்கு வெளியீடு….!!!!

தமிழகத்தில் பிளஸ் டூ துணைத் தேர்வு முடிவுகளை நாளை முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. பிளஸ் 2 துணைத் தேர்வு எழுதியவர்கள் தேர்வு முடிவை மதிப்பெண் பட்டியலாக இன்று பகல் 2 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த இணையதளத்தில் நுழைந்த உடன் ரிசல்ட் என்று தோன்றும். அதில் பிளஸ் டூ துணைத் தேர்வு மதிப்பெண் பட்டியலை கிளிக் செய்து தேர்வர்கள் தங்களது தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம். மேலும் விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் வருகின்ற 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை உரிய கட்டணம் செலுத்தி மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

குறிப்பாக விடைத்தாள் நகல் பெறுவதற்கு ஒவ்வொரு பாடத்திற்கும் 275 மற்றும் மறு கூட்டல் கட்டணமாக உயிரியல் பாடத்திற்கு 305 ரூபாய் மற்ற பாடங்களுக்கு ஒவ்வொன்றுக்கும் 205 ரூபாய் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |