Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு நடத்துவது உறுதி…. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன் பிறகு எட்டு மாதங்கள் கழித்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப் பட்டது. ஆனால் சில பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை அளிக்கப் பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வை நடத்துவதில் உறுதியாக இருக்கிறோம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். ஏனென்றால் பிளஸ் டூ முடித்த பிறகு கல்லூரிக்குள் நுழையும்போது மாணவ மாணவிகள் தங்களது விருப்பமான துறையை தேர்ந்தெடுப்பதற்கு மதிப்பெண்கள் அவசியமானது. தேர்வு எழுதாமல் அனைவரும் தேர்ச்சி என அறிவிப்பது தேவையற்றது என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |