Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன் பிறகு எட்டு மாதங்கள் கழித்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப் பட்டது. ஆனால் சில பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும் பிளஸ் டூ பொதுத்தேர்வு தள்ளிப்போகுமா தவிர ரத்து செய்யப்படாது. 15 நாட்கள் அல்லது ஒரு மாதத்திற்கு முன்பே பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதியை அறிவிக்க கோரிக்கை விடுத்துள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |