தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன் பிறகு எட்டு மாதங்கள் கழித்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப் பட்டது. ஆனால் சில பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தேர்வு அறிவிப்புக்கு பிறகு தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். ஆன்லைன் வகுப்புகள் தொடங்கும் முன்பு பாடப்புத்தகம் தருவது பற்றி ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கையை தனியார் பள்ளிக்கு இணையாக விளம்பரப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.