Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“தமிழகத்தில் பீஸ்ட் ஒரு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா…?” மாவட்ட வாரியாக இதோ உங்களுக்காக…!!!

நெகட்டிவ் விமர்சனங்களால் பீஸ்ட் திரைப்படத்தின் வசூல் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படமானது நேற்று முன்தினம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. இந்த நிலையில் இத்திரைப்படமானது பாக்ஸ் ஆபீஸில் வசூலித்த தொகை பற்றி தகவல் வெளியாகி இருக்கின்றது.

சென்னை 2 கோடி, செங்கல்பட்டு 10 கோடி, தெற்கு ஆற்காடு 5 கோடி, கோவை 5.9 கோடி, சேலம் 3.8 கோடி, மதுரை 4.9 கோடி, திருச்சி 3.6 கோடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி 3 கோடி. தமிழகத்தில் மொத்தமாக 38.2 கோடி ரூபாயை பீஸ்ட் படம் வசூலித்துள்ளது. தமிழகத்தில் முப்பத்தி எட்டு கோடி வசூலித்தது இதுவே முதல் முறை என கூறப்படுகின்றது. இதைத்தொடர்ந்து பீஸ்ட் படத்தின் நெகடிவ் விமர்சனங்கள் எழுந்ததால் மாலை மற்றும் இரவு காட்சிகளில் வசூல் குறைந்ததாக கூறப்படுகின்றது. மேலும் 4 நாட்கள் தொடர்ந்து விடுமுறை என்பதால் படத்திற்கு முன் பதிவு செய்தவர்களில் கூட்டத்தால் அரங்கம் நிறைந்துள்ளது.

Categories

Tech |