தமிழகத்தில் புகையிலை பயன்பாடு மற்றும் விதிமீறல் தொடர்பாக 104 என்ற கட்டணம் இல்லா அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார். சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்கள் தடுப்புச் சட்டம் 2003 ன் படி விதிமீறல்கள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.
புகையிலைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து ஆலோசனையை பெறுவதற்கு மத்திய அரசின் கட்டணம் இல்லா தொலைபேசி 1800112356 எண்கள் செயல்பாட்டில் உள்ளதாகவும் தற்போது தமிழக அரசின் கட்டணமில்லா 104 மருத்துவ சேவை எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் எலக்ட்ரானிக்ஸ் சிகரெட் பயன்பாட்டிற்கு கடந்த 2018 ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்ட நிலையில் அவற்றை பயன்படுத்துவோர் குறித்தோம் இதில் புகார் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.