தமிழகத்தில் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்வதற்காக துறை ரீதியான மானிய கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் புதிய பேருந்துகள் வாங்கப்படும். அந்த வகையில் தற்போது 1,000 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்வதற்காக ரூ.420 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாநகர போக்குவரத்துக் கழகம் விரைவு போக்குவரத்து கழகம் தவிர, இதர கோட்டங்களுக்கு ஒரு பேருந்துக்கு தலா 42 லட்சம் என மதிப்பீடு செய்து போக்குவரத்து துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் விழுப்புரம் மாவட்டத்திற்கு 180, சேலம் மாவட்டத்திற்கு 100 , கோவை மாவட்டத்திற்கு 120, கும்பகோணம் மாவட்டத்திற்கு 250 , மதுரை மாவட்டத்திற்கு 220 , நெல்லை மாவட்டத்திற்கு 130 என்ற வீதத்தில் பேருந்துகள் வழங்கப்பட உள்ளது.