சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மலைவாழ் குழந்தைகளுடைய கல்வியை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் ஏற்காட்டில் புளியங்கடை செங்காடு மலைப்பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் சனிக்கிழமை ஆய்வு செய்யப்பட்டது. எந்த நேரத்திலும் இடியும் நிலையில் கட்டிடங்கள் இருப்பதால் அந்த கட்டிடங்களை அகற்றுவதற்காக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அங்கு கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி தடை விடாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சுமார் 2500 பள்ளிகளில் வகுப்பறைகள் இன்றி மரத்தடியில் மாணவர்கள் கல்வி பயிலும் நிலை உள்ளது. அந்த பள்ளிகள் கணக்கெடுக்கப்பட்டு கூடுதல் வகுப்பறைகள் அமைக்கப்படும் 18 ஆயிரம் வகுப்பறைகள் கட்டப்பட உள்ளது. கழிவறை வசதியும் ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.