தமிழகத்தில் புதிதாக 2,000 துணை சுகாதார நிலையங்கள், 250 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்க மத்திய அரசிடம் அனுமதி கோரப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். முதல்வரின் வலியுறுத்தலின் படி, புதிதாக 50 நகர்ப்புற சுகாதார நிலையங்கள் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
மேலும், மருத்துவ துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். தமிழகத்தை பொறுத்தவரை 2286 ஆரம்ப மற்றும் நகர்புர சுகாதார நிலையங்கள் இருக்கின்றன. அதேபோல துணை சுகாதார நிலையங்கள் 8,713 செயல்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இது போன்ற கட்டமைப்பு கிடையாது என்றார்.