மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் மூலமாக மக்களின் பயன்பாட்டிற்கு வர உள்ள நடமாடும் மருத்துவ வாகனத்தை சென்னையை டிஎம்எஸ் வளாகத்தில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு செயதார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கொரோனா காரணமாக உயிரிழந்த முன் களப்பணியாளர்கள் 168 பேருக்கு தற்போது வரை 74 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா குறைவாக இருந்தாலும் தற்போது மக்கள் கட்டுப்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.
கிராமங்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் மூலமாக 20 கோடி மதிப்பில் 389 நடமாடும் புதிய மருத்துவ வாகனங்கள் கிராமங்களுக்கு செல்ல உள்ளது. ஒவ்வொரு வாகனத்திலும் ஒரு மருத்துவர், 1 செவிலியர், மருத்துவ பணியாளர் என்ற அடிப்படையில் ஒரு வாகனம் இயங்க உள்ளது. மேலும் பெரம்பலூர், தென்காசி, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகளை அமைக்க டெல்லி சென்று மத்திய அரசிடம் நேரடியாக அனுமதி கோர உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.