Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிய உச்சம் தொட்ட பெரிய வெங்காயத்தின் விலை…. பொதுமக்கள் அதிர்ச்சி….!!!

தமிழகத்தில் பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் வெங்காயம் விலை உயர்வு வியாபாரிகளுக்கு மட்டுமின்றி பொதுமக்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பெரிய வெங்காயத்தின் தேவையை ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, போன்ற மாநிலங்கள் பூர்த்தி செய்கிறது. தற்போது அந்த 3 மாநிலங்களிலும் கனமழை பெய்து வருவதால் அறுவடைக்கு தயாராக இருந்த பெரியவெங்காயம் வேளாண் நிலத்திலேயே அழுகி வருகிறது. இதனால் தமிழகத்தில் சில நாட்களாக வெங்காயத்தின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.

கடந்த 3 ஆண்டுகளில் 3 வது முறையாக பெரிய வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது.திருச்சி மொத்த வெங்காய மண்டியில் கடந்த 10 நாட்களில் இரண்டு முறை வெங்காயம் விலை உயர்ந்துள்ளது நேற்று 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட பெரிய வெங்காயம் இன்று 44 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது இதை போன்று தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது சில்லரை கடைகளில் 60 ரூபாயை நெருங்கியுள்ளது.

இந்த விலையேற்றத்தை பற்றி திருச்சி மொத்த வெங்காயம் விற்பனையாளர் சங்கச் செயலாளர் தங்கராஜ் கூறுகையில், மத்திய மண்டலத்தில் உள்ள 9 மாவட்டங்களுக்கு நாங்கள் வெங்காயம் சப்ளை செய்து வருகிறோம். ஒரு நாளைக்கு திருச்சிக்கு 300 மெட்ரிக் டன் வெங்காயம் வருகிறது. இதில் அதிக தேவையை கர்நாடகம் பூர்த்தி செய்து வருகிறது. ஆனால் அறுவடை நேரத்தில் அங்கு கனமழை பெய்து வருவதால் புதிய வெங்காயம் தரமானதாக இல்லை. எனவே அந்த வெங்காயத்தை உடனே விற்க வேண்டும் இல்லையென்றால் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அதனால் வியாபாரிகள் மஹாராஷ்டிரா,குஜராத் போன்ற மாநிலங்களில் இருந்து பழைய வெங்காயத்தை வரவழைக்கின்றன. வெங்காயத்தின் தேவை அதிகரித்துள்ளதால் அங்குள்ள வியாபாரிகள் வெங்காயத்தை பதுக்க ஆரம்பித்துள்ளனர். இதுவே விலை உயர்விற்கு காரணமாக இருக்கிறது. அவர்களிடம் போதுமான இருப்பு இருக்கும் என்று கருதுகிறோம். அதனால் கடந்த ஆண்டைப் போல வெங்காயம் விலை உயர்வதற்கான வாய்ப்பு இல்லை என்று கூறுகிறார். மேலும் பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் வெங்காயம் விலை உயர்வு வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும், சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |