Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிய உச்சம் தரும் கொரோனா பாதிப்பு…. நேற்று ஒரே நாளில் இவ்வளவா?…. சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவல் பரவத் தொடங்கியது. இதனால் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று கனிசமான அளவு குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளவுர்கள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது . அதாவது இன்று ஒரே நாளில் புதிதாக 2,654 பேருக்கு தொற்று கன்டறியபட்டுள்ளது.இவர்களில் கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் மட்டும் 1,066 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் 375, திருவள்ளுவரில் 135, கோவையில் 144, காஞ்சிபுரத்தில் 79 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர்களில் 1542 பேர் டிஸ்சார்ஜ் ஆகிய நிலையில் தற்போது மொத்தம் 15,516 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனா எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தாண்டி வந்தாலும் ஒரே ஆறுதல் அளிக்கும் விஷயமாக கொரோனாவால் இன்று யாரும் பலியாகவில்லை. அதே நேரத்தில் தினமும் மீண்டும் கொரோனா அதிகரித்து வருவதால், நான்காவது அலை உருவாகிறதா என்று மக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.

Categories

Tech |