தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டில் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊடரங்கு நடைமுறையில் உள்ளது. மேலும் பண்டிகை காலங்களில் கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து கண்காணிக்கவும், அதனை கட்டுப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகளைப் பற்றியும், அண்டை மாநிலங்களில் கொரோனா தொற்று நிலையினை கருத்தில் கொண்டு முதல்வர் முக. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதையடுத்து பொதுமக்கள் அனைவரும் பண்டிகை காலங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்கவும், முகக்கவசம் கட்டாயம் அணிவதோடு, சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம், சென்னை மாநகராட்சி, மருத்துவத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடத்தப்படும். தடுப்பூசி முகாம்களுக்குச் சென்று பொதுமக்கள் தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. இன்று முதல் அனைத்து வகை கடைகள், உணவகங்கள் மற்றும் அடுமனைகள் இரவு 11 மணிவரை இன்றிலிருந்து இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது.
மேலும் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு உள்பட அனைத்து நாட்களிலும் பொதுமக்கள் வழிபாட்டுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அனைத்து தனிப் பயிற்சி நிலையங்கள் அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் போன்றவையும் இன்று முதல் செயல்படுகிறது. நவம்பர் 1ஆம் தேதியிலிருந்து மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும். மாதாந்திர மக்கள் தொடர்பு முகாம் முதல் தனியார் நிறுவனங்கள் நடத்தும் பொருட்காட்சி கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்படலாம்.
நர்சரி பள்ளிகள், அங்கன்வாடி பள்ளிகள், முழுமையாக செயல்படலாம். காப்பாளர் போன்ற அனைத்து பணியாளர்களும் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்று கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருமணம் மற்றும் அதை சார்ந்த நிகழ்வுகளில் 100 நபர்கள் பங்கு பெற அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் தமிழகத்தில் அனுமதிக்கப்படாத செயல்பாடுகள், திருவிழாக்கள், அரசியல் சமுதாய மற்றும் கலாச்சார நிகழ்வுகளுக்கு நடைமுறையிலுள்ள தடை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.