Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிய கொரோனா கட்டுப்பாடுகள்… என்னென்ன விதிமுறைகள்… வெளியான அறிவிப்பு..!!

இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு முடக்கம் 20ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது என தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகிறது. இவற்றை கட்டுக்குள் வைக்க பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு செய்து வருகிறது. இருப்பினும் தொற்று குறைந்தபாடில்லை. எனவே முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி சில முக்கியம் அம்சங்கள் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 20ஆம் தேதி முதல் இரவு 10 மணி முதல் மாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும்.

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிப்பு.

முழு ஊரடங்கு நாளில் இறைச்சி, மீன் கடை, காய்கறி கடைகள் , சினிமா, தியேட்டர்கள், வணிக வளாகம் உள்ளிட்ட அனைத்து கடைகளுக்கும் செயல்பட தடை.

பால் வினியோகம், மருந்தகம் உள்ள அத்தியாவசிய பணிகள் மட்டுமே அனுமதி.

உணவுகள், தேநீர் மற்றும் மளிகை கடைக்கு இரவு 9 மணி வரை மட்டுமே அனுமதி.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது.

சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை .

ஞாயிற்றுக்கிழமைகளில் உணவகங்களில் பார்சல் மட்டுமே வழங்கப்படும்.

பெட்ரோல், டீசல் பங்குகள் இரவிலும் செயல்படும்.

இரவு நேர ஊரடங்கின்போது தனியார் மற்றும் பொது போக்குவரத்து, ஆட்டோ, டாக்ஸிக்கு அனுமதியில்லை.

Categories

Tech |