Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்…. எதற்கெல்லாம் அனுமதி…???

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து இன்றுடன் ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில் மேலும் ஜூலை-5 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று காலை 6 மணி முதல் புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதில் தொற்று குறையாத கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் புதிய தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் மற்ற மாவட்டங்களிலும் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், தானியங்கி பணம் வழங்கும் சேவைகள் 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். இ-சேவை மையங்கள் வழக்கம் போல இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் தேநீர் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் அனைத்து தனியார் நிறுவனங்களும் 100% பணியாளர்களுடனும், மற்ற மாவட்டங்களில் 50% பணியாளர்களுடனும் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது .

ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட 4 மாவட்டங்களுடன், கூடுதலாக 23 மாவட்டங்களில் பேருந்து சேவைக்கு  அனுமதி.

தொற்று குறையாத 11 மாவட்டங்களில் சலூன் கடைகள் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஆனால் மதுக்கடைகள் மட்டும் திறக்க அனுமதியளிக்கப்படவில்லை.

தீப்பெட்டி தொழிற்சாலைகள் 100% பணியாளர்களுடன் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. வாகன பழுது பார்க்கும் மையங்கள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படும்.

திருச்சி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் வணிக வளாகங்கள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

தொற்று குறையாத 11 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் உடற்பயிற்சி கூடங்கள், யோகா மையங்கள் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் காலை 5 முதல் காலை 9 மணி வரை நடைப்பயிற்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

11 மாவட்டங்களில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு திருமணத்திற்கு இ-பாஸ் பெற வேண்டும். மற்ற மாவட்டங்களில் திருமணம் சார்ந்த போக்குவரத்திற்கு இ-பாஸ் இல்லாமல் பயணிக்கலாம். நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் ஆகிய இடங்களுக்கு பயணிக்க இ-பாஸ் தேவை.

Categories

Tech |