Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிய தாலுகா…. வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் நான்கு நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் சட்டப்பேரவை கூடியது. இதனையடுத்து சட்டப்பேரவையில் பேசிய வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தஞ்சை மாவட்டத்தில் திருவோணம் தாலுகா (வருவாய் வட்டம்) புதிதாக உருவாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் புதிதாக 274 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும் என்றும், கடலூர் விஜயமாநகரம், புதுக்கூரைப்பேட்டை கிராமங்களில் சுமார் 3 ஆயிரம் குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

Categories

Tech |