தேர்தல் நியாயமான முறையில் நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இன்று அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.
தமிழக அனைத்து கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி தலைமையில் தி.நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றுள்ளது.இந்த கூட்டத்தில் பாஜக மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி, அமமுகவை சேர்ந்த முன்னள் அமைச்சர் செந்தமிழன், ஃபார்வார்டு பிளாக் கட்சியை சேர்ந்த நல்லுச்சாமி, முக்குலத்தோர் புலிப்படை பொதுச்செயலாளர் மூர்த்தி மற்றும் சமத்துவ மக்கள் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, நாடாளும் மக்கள் கட்சி, சமாஜ்வாடி கட்சி, குடியரசு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கிருஷ்ணசாமி கூறியபோது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் 2020 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பல இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் தேர்தல் நேர்மையாக நடத்தப்பட வேண்டும் என அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் பாஜக உள்ளிட்ட பல கட்சிகள் கலந்து கொண்டனர். வருகிற மே 1 முதல் 100 பொதுக்கூட்டம் நடைபெறும் முதலில் மக்கள் இயக்கமாக கொண்டு செல்லப்படும்.
அதன்பின் போராட்டம் நடைபெறும் எந்தக் கட்சியையும் குறிப்பிட்டு செல்லவில்லை “எங்கள் வாக்கு விற்பனை இல்லை” மக்களவைத் தேர்தல், இடைத்தேர்தல், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல், இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்கும் மோசமான சூழ்நிலை நிலவியது. மேலும் இது நீடிக்கக்கூடாது. தேர்தல் நியாயமான முறையில் நடத்தப்பட வேண்டும், என்றும் இந்திய தேர்தல் ஆணையத்தையும், மாநில தேர்தல் ஆணையத்தையும் வலியுறுத்தும் வகையில் இன்று அரசியல் கட்சிகளின் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
இந்த கூட்டத்தில் பாஜக, சமாஜவாதி, அமமுக, முக்குலத்தோர், புலிப்படை, ஐஜேகே நாடார், பேரவை உள்ளிட்ட அரசியல் கட்சிகள் அமைப்புகளுடன் கூடிய ஆலோசனை நடத்தபட்டிருந்தது. எனவே யாரும் பணம் செலவழிக்க கூடாது என்பதை வலியுறுத்தி இந்த அணியை உருவாக்கி உள்ளோம். இது தேர்தலுக்கான அணியல்ல, ஊழலை ஒழிப்பதற்கான அணி. தேர்தலில் வாக்காளர்கள் பணம் தருவது அனைத்து கட்சிகளுமே கையை கடிக்கிறது. தேர்தலில் போட்டியிடுவது பற்றி நினைத்துகூட பார்க்க முடியாத அளவிற்கு பணம் விளையாடுகிறது. இவ்வாறு புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.